2024 நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பை இனம், மதம் என வாக்காளரை சிறையில் அடைத்த எல்லைக்குள் கட்டுப்படாத வாக்களிப்பு என வர்ணித்துள்ள கிரிக்கெட் வர்ணணையாளர் ரொசான் அபயசிங்க, நகரங்கள் கிராமங்கள் மாவட்டங்கள் மாகாணங்கள் அனைத்தும் ஒரே குரலில் பேசியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2019 இல் அப்போதைய அரசாங்கத்தின் வெற்றி மிகப்பெரியது என பாராட்டப்பட்டது. ஆனால் அந்த வெற்றியில் ஒரு முக்கியமான விடயமிருந்தது, அதாவது மக்கள் வாக்களித்த விதத்தில்.
வடக்கும், கிழக்கும், மலையகமும் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன. அதன் மூலம் அவர்கள் தென்பகுதி தலைமைத்துவத்தை நம்பவில்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்தினார்கள்.
2024 தேர்தல் முடிவு மகத்தானது மாத்திரமில்லை. இது ஒரு சுனாமி. மேலும் வாக்களிப்பு இடம்பெற்ற விதம்தான் இதற்கு மகுடம்போல காணப்படுகின்றது.
இனம், மதம் என வாக்காளரை சிறையில் அடைத்த எல்லைக்குள் கட்டுப்படாத வாக்களிப்பு இது. நகரங்கள் கிராமங்கள் மாவட்டங்கள் மாகாணங்கள் அனைத்தும் ஒரே குரலில் பேசியுள்ளன.. இது இயற்கையாகவே நாட்டிற்கு சிறந்த விடயம்.
இலங்கை அதன் அரசியல் அத்தியாயத்தில் ஒரு புதிய பக்கத்திற்குள் நுழைகின்றது. உறுதியளிக்கப்பட்ட மாற்றத்திற்காக காத்திருக்கின்றது.
No comments:
Post a Comment