இரட்டை சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2024

இரட்டை சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா

கான்பூரில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கலீத் அகமதுவின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் என கிராண்ட் டபுள் சாதனையை எட்டிய வீரர் என்கிற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவ் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இருவர் உட்பட 10 வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை எட்டியுள்ளனர். இந்தச் சாதனையைப் படைத்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையும் ஜடேஜா பெற்றுள்ளார்.

சர்வதேச தரவரிசையில் ஜடேஜா இரண்டாவது இடத்தில் உள்ளார், இங்கிலாந்து ஜாம்பவான் இயன் போத்தம் நம்பர் 1 இடத்தில் அமர்ந்துள்ளார். அவர் 72 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார், ஜடேஜா தனது 73ஆவது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டி அசத்தி இருக்கிறார்.

300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 7ஆவது இந்திய பந்துவீச்சாளர் ஜடேஜா ஆவார். அதற்காக அவர் 17,428 பந்துகளை எடுத்துக்கொண்டார். அதேநேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 15,636 பந்துகளில் எடுத்துக்கொண்டு இந்திய அணிக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

அனில் கும்ப்ளே (619), ஆர் அஷ்வின் (524), கபில் தேவ் (434), ஹர்பஜன் சிங் (417), இஷாந்த் ஷர்மா (311), ஜாகீர் கான் (311) ஆகியோர் 300 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் ஆவார்.

மேலும், ஜடேஜா 300 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டிய முதல் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment