ஜனாதிபதியை சந்தித்த சிறீதரன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2024

ஜனாதிபதியை சந்தித்த சிறீதரன்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் இறைமையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்த சிவஞானம் சிறீதரன் , ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

No comments:

Post a Comment