எல்பிட்டிய பிரதேசசபைத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் விரலில் குறியிடுதல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்காளர்களின் இடது கை சிறு விரலில் அடையாளம் இடப்பட்டுள்ளமையால், உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 53அ (3) ஆம் பிரிவின் பிரகாரம் 2024.10.26 ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச தேர்தலின்போது வாக்காளர்களின் இடது கை பெருவிரலில் அடையாளமிடப்படும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளரின் இடது கையில் பெரு விரல் இல்லாதிருக்கும் பட்சத்தில், அவரது வலது கையில் உள்ள வேறேதெனுமொரு விரலில் அடையாளமிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் விரலில் அடையாளமிடுவது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment