உதவி ஆசிரியர் நியமனத்திற்கான இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 22, 2024

உதவி ஆசிரியர் நியமனத்திற்கான இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு

கடந்த அரசாங்கத்தின்போது பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு தொடர்ந்தும் நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்திய பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி இந்த இடைக்கால உத்தரவு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சை ஜூன் மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படும் எனவும் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், தொழில் ரீதியாக தொண்டர் ஆசிரியராக பணியாற்றும் தாம், உதவி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்பதாகவும், இலங்கை ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு முரணாக இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment