இன்றும், நாளையும் தபால் மூலம் வாக்களிக்க இறுதி சந்தர்ப்பம் : தவறவிடும் பட்சத்தில் வேறு எந்த நாளிலும் வாக்குகளை அளிக்க முடியாது - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 10, 2024

இன்றும், நாளையும் தபால் மூலம் வாக்களிக்க இறுதி சந்தர்ப்பம் : தவறவிடும் பட்சத்தில் வேறு எந்த நாளிலும் வாக்குகளை அளிக்க முடியாது

கடந்த 4,5,6 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு இன்றும் (11) நாளையும் (12) வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இன்று தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று வாக்களிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தாதவர்கள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அல்லது வேறு எந்த நாளிலோ வாக்குகளை அளிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment