வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டவர்களின் விபரம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 18, 2024

வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டவர்களின் விபரம்

வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிப்பதற்கு சட்ட ரீதியாக அனுமதியளிக்கப்பட்டவர்களின் விபரம் பினவருமாறு,

1. வாக்கெடுப்பு நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள்

2. வாக்கெடுப்பு நிலைய பணிக்குழு

3. வாக்கெடுப்பு நிலைய கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள்

4. ஜனாதிபதி வேட்பாளர்கள்

5. ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் முகவர்கள்

6. ஜனாதிபதி வேட்பாளர்களின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள்

7. ஜனாதிபதி வேட்பாளர்களின் பெரும்பாக முகவர்கள்

8. வாக்கெடுப்பு நிலைய முகவர்கள்

9. உள்நாட்டு/ வெளிநாட்டு கண்காணிப்பு ஒழுங்கமைப்புகளின் முகவர்கள்

10. தெரிவத்தாட்சி அலுவரின் அனுமதிபெற்ற அலுவலர்கள்

No comments:

Post a Comment