இஸ்ரேலில் ஹோட்டல் துறையில் வேலைவாய்ப்புகளுக்கு தொழிலாளர்களை ஆட் சேர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் , இலங்கைத் தொழிலாளர்கள் ஹோட்டல் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது என ஜனாதிபதியின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆலோசகர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
காலியில் நேற்று (17 ) நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இஸ்ரேலில் உள்ள ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்புகள் ஆண்,பெண் இருபாலருக்கும் திறக்கப்பட்டுள்ளன. எனவே, அதற்காக விண்ணப்பிப்பவர்கள் NVQ மட்டம் 3 தரச்சான்றிதழ் பேற்றுக்கு வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
இந்த வேலைவாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் சில தினங்களில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
இதற்கிடையில், இஸ்ரேலில் கைத் தொழில் துறையில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே வேலை ன, எதிர்காலத்தில் நிர்மாணத்துறையில் தொழிலாளர்களை வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைவாய்ப்புகளுக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது , அதில் ஒரு அங்கமாக கடந்த வாரம் இரண்டு குழுக்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் விவசாயத் துறையில் இதுவரை இரண்டாயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுள்ளனர். இவ்வேலைவாய்ப்புக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் மாத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு பொது மக்கள் எந்தவொரு இடைத்தரகரிடமும் பணம் செலுத்த வேண்டிய அவசியமுமில்லை. அவ்வாறு பணம் பெறும் ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment