துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவி கோரி பொலிஸார் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 16ஆம் திகதி ஸ்ரீ புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்த தப்பிச் சென்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் ஸ்ரீ புர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில், அதில் சந்தேகநபர் ஒருவரை அடையாளம் கண்டுள்ளனர்.
அவர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், மேலுள்ள புகைப்படத்தில் உள்ள குறித்த சந்தேகநபர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பான விபரங்கள்
பெயர்
கந்தே லேகம்லாகே கயான் சுகததாச
முகவரி
இலக்கம் 87, சமருகம, அவிசாவளை
தேசிய அடையாள அட்டை
850220751V, 198502200751
தகவல் தெரிந்தால்
ஶ்ரீ புர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
071 859 1181
ஸ்ரீ புர பொலிஸ் நிலையம்
025 225 5062
No comments:
Post a Comment