கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு : இன்று முதல் கறுப்பு வாரம் பிரகடனம் - News View

About Us

About Us

Breaking

Monday, August 12, 2024

கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு : இன்று முதல் கறுப்பு வாரம் பிரகடனம்

இன்று (12) முதல் 19ம் திகதி வரை கருப்பு எதிர்ப்பு வாரத்தை அறிவித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கான சேவை யாப்பில் தமது யோசனைகள் உள்ளடக்கப்படாமையே இதற்கு காரணமென கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் கிராம உத்தியோகத்தர்கள் இன்று காலை முதல் உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment