குடியேற்றத்தை எதிர்த்து இலண்டனில் மாபெரும் பேரணி : 1.5 இலட்சம் பேர் பங்கேற்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 15, 2025

குடியேற்றத்தை எதிர்த்து இலண்டனில் மாபெரும் பேரணி : 1.5 இலட்சம் பேர் பங்கேற்பு

இங்​கிலாந்​தில் வெளி​நாட்​டினர் அதி​கள​வில் குடியேறு​வதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தீவிர வலது சாரி ஆர்​வலர் டாமி ராபின்​சன் தலை​மை​யில் நேற்றுமுன்​தினம் (13) இலண்​டனில் “யுனைட் தி கிங்​டம்” பிரம்​மாண்ட பேரணி நடை​பெற்​றது. இதில், 1.50 இலட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர்.

அப்​போது அவர்​களது போ​ராட்​டத்​துக்கு போட்​டி​யாக சட்​டப்​பூர்வ குடியேறிகளுக்கு ஆதரவு தெரி​வித்து “பாசிசத்​துக்கு எதி​ரான பேரணி”க்கு ஸ்டாண்ட் அப் டு ரேசிசம் என்ற அமைப்பு ஏற்​பாடு செய்திருந்​தது. இதில், 5,000 இற்கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர்.

இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்​படு​வதை தடுக்​கும் வகை​யில் அவர்​களை அப்​புறப்​படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்​த​போது தீவிர வலது சாரி ஆதர​வாளர்​கள் குழு பாட்​டில் உள்​ளிட்​ட​வற்றை தூக்கியெறிந்து பொலிஸார் மீது தாக்​குதல் நடத்​தி​யது. 

இதில், 26 பொலிஸ் அதி​காரி​கள் காயமடைந்​தனர். அதில் 4 பேருக்கு படு​கா​யம் ஏற்​பட்​டது. இது தொடர்பாக 25 போ​ராட்​டக்​காரர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

டாமி ராபின்​சனின் வலது சாரி பேரணிக்கு ஆதரவு தெரி​வித்து எக்ஸ் தள உரிமை​யாள​ரான எலான் மஸ்க், வீடியோ இணைப்பு வழி​யாக பேசி​ய​தாவது, வாக்​காளர்​களை இறக்​குமதி செய்​வ​தால் இடதுசாரிகள் அதிக பலனடைகின்​றனர். தங்​கள் நாட்டு மக்​களை தங்​களுக்கு ஆதர​வாக வாக்​களிக்க சமா​தானப்​படுத்த முடியாவிட்டால் இடது​சா​ரி​கள் மற்ற நாடு​களி​லிருந்து மக்​களை தங்களுக்கு வாக்​களிக்க இறக்​குமதி செய்​வார்​கள். அது நிறுத்​தப்​ப​டா​விட்​டால் அது அவர்​களுக்கு வெற்​றி​ பெரும் ஒரு உத்​தி​யாகவே அமையும்​ என தெரிவித்தார்.

No comments:

Post a Comment