ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினூடாக தனக்கான ஒரு அரசியல் முகவரியை பெற்று தனது சுய இலாபத்திற்காக சமூக சிந்தனையின்றி சோரம் போன நஷீர் அஹமட் எமது பேரியக்கத்தின் தேசியத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீம் பற்றியும் அதன் பிரதித் தலைவர் ஹிஸ்புல்லாஹ் பற்றியும் பேசுவதற்கு தகுதியற்றவர் என கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.
இன்று ஏறாவூரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான கூட்டத்தில் நஷீர் அஹமட் "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் ஒரு பொட்டணி வியாபாரி என்றும் அதன் பிரதித் தலைவர் ஹிஸ்புல்லாஹ் ஒரு முனாபிக்" என்றும் பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் அறிக்கையாகவே இதனை சட்டத்தரணி ஹபீப் றிபான் வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கித்தின் முதிகில் ஏறி மாகாண சபை உறுப்பினர், முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவிகளுடாக அரசியல் அந்தஸ்தை பெற்று அதன் காரணமாகவே இன்று ஆளுநராக இருக்கும் அவர் கட்சியினையும் அதன் தலைமைகளைப் விமர்சிப்பதற்கு தகுதியற்றவர்.
மேலும் மக்கள் மிக அவதானத்துடன் சிந்தித்து இன்ஸாஅல்லாஹ் வெற்றி பெறக்கூடிய வெற்றி வாய்ப்பினை பெறக்கூடிய சஜீத் பிரேமதாசவுக்கு வாக்கினை அளித்து எமது ஒற்றுமையினை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment