அரசியல் நிகழ்ச்சியில் சண்டையிட்ட திகாம்பரம், வேலுகுமார் : வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் கழுத்தைப் பிடித்துக் கொண்டனர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 21, 2024

அரசியல் நிகழ்ச்சியில் சண்டையிட்ட திகாம்பரம், வேலுகுமார் : வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் கழுத்தைப் பிடித்துக் கொண்டனர்

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அரசியல் செய்து பின்னர் பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோர் தனியார் தொலைக்காட்சி விவாத இடைநடுவில் கைகலப்பில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியின் இடையே பழனி திகாம்பரம் வேலுகுமாரைப் பார்த்து ‘பாbர் குமார்’ எனக்கூறிக் கொண்டே செல்ல, வேலுகுமார் திகாம்பரத்தினை பார்த்து குடு திகாம்பரம் எனக்கூற, கோபம் உச்சத்தில் திகாம்பரம் வேலுகுமாரை தாக்கி கழுத்தினை நெரிக்கும் விதமாக நடந்து கொண்டிருந்ததை நேரலையூடாக காணக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்தவர்கள், தொகுப்பாளர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து இருவருக்குமிடையில் சமரசம் செய்தனர்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் மற்றும் மனோ கணேசனுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

No comments:

Post a Comment