5 வகையான உரங்களின் விலைகள் குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, August 26, 2024

5 வகையான உரங்களின் விலைகள் குறைப்பு

தேயிலைக்கான உர மானியத்தை வழங்குவதற்குத் தேவையான மொத்தத் தொகையான 2400 மில்லியன் ரூபாவை இலங்கை தேயிலைச் சபை வழங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

தேயிலைப் பயிர்ச் செய்கைக்கான உர மானியத் திட்டம் கடந்த வாரம் முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறுகிறது.

அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலை 4,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்

தேயிலைப் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் T 200, T 750, U 709, U 834 மற்றும் T 65 ஆகிய ஐந்து வகையான உரங்களின் விலைகளை அரச உர நிறுவனம் குறைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment