வாக்குச்சீட்டுகள் ஏற்றுக் கொள்ளும் பணிகள் ஆரம்பம் : தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து : செப்டம்பர் 3 ஆம் திகதி முதல் விநியோகிக்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, August 26, 2024

வாக்குச்சீட்டுகள் ஏற்றுக் கொள்ளும் பணிகள் ஆரம்பம் : தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து : செப்டம்பர் 3 ஆம் திகதி முதல் விநியோகிக்க நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்காளர் அட்டைகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக் கொள்ளும் பணி இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வாக்காளர் அட்டை விநியோகம் செப்டம்பர் 3 ஆம் திகதி தொடங்கும் என்றும், செப்டம்பர் 8 ஆம் திகதி அதற்கான சிறப்பு நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

எவரேனும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment