சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணி ஒருவர் சட்டவிரோதமாக கொண்டுவந்த உயிருள்ள மீன்களை சுங்க உயிர்ப் பல்வகைமைப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இன்று (10) அதிகாலை 1.00 மணியளவில் SQ 468 விமானத்தில் வந்த குறித்த பயணியினால் கொண்டுவரப்பட்ட மீன்களை சுங்கத்திற்கு அறிவிக்காமல் விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்பட்டபோது சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டது.
365 மீன்கள் மற்றும் ஆமைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமும், சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரிய பயணி தலவத்துகொடையில் வசிக்கும் 50 வயதுடைய இலங்கையர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment