சுமந்திரனைச் சந்தித்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ் : வெற்றி பெற்றால் வடக்கு, கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 10, 2024

சுமந்திரனைச் சந்தித்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ் : வெற்றி பெற்றால் வடக்கு, கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ் இன்று (10) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்தார்.

இதன்போது, செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், வடக்கு கிழக்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அம்மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளதாக, அக்கட்சியின் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், அரசியல் பிரிவு உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அப்பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கவும் சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாக சுமந்திரன் எம்.பியிடம் நாமல்  ராஜபக்ஷ் தெரிவித்ததாக காசிலிங்கம் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றாலும், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள குடிமக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாகவும், இந்த மாவட்டங்களை சர்வதேச வர்த்தக மையங்களாக மேம்படுத்தவும் அவர் விரும்புவதாகவும்  ராஜபக்ஷ் கூறினார்.

இவ்வாறான குறைகளை விரிவாக விவாதிக்க இலங்கை தமிழ் அரசு கட்சியின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு நாமல்  ராஜபக்ஷ் கோரியதாக காசிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

நாமல்  ராஜபக்ஷ்வுடனான இந்த கலந்துரையாடல் குறித்து நாளை (11) கூடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மத்தியக் குழுக் கூட்டத்தில் பேசவுள்ளதாக சுமந்திரன் எம்.பி. கூறியுள்ளதுடன், வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் பற்றிய கரிசனை தொடர்பில் நாமல் ராஜபக்ஷ்வின் முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் காசிலிங்கம் தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment