குற்றத்தை ஒப்புக் கொண்ட பௌசி எம்.பிக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 27, 2024

குற்றத்தை ஒப்புக் கொண்ட பௌசி எம்.பிக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனை

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (27) இவ்வுத்தரவை வழங்கியுள்ளார்.

அதற்கமைய 2 வருட கடூழிய சிறைத் தண்டனையானது 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஏ.எச்.எம். பௌசி குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் 4 இலட்சம் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2010 இல், ஏ.எச்.எம். பௌசி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றியபோது, ​​அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக நெதர்லாந்தினால் வழங்கப்பட்ட சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை தனது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியதாகவும், நிதியமைச்சு வாகனத்தின் பராமரிப்புக்காக சுமார் 10 இலட்சம் ரூபா பணம் செலவழித்தமை போன்ற 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் தொடரப்பட்ட வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment