சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் 29 ஆம் திகதி வெளியிடப்படும் : உத்தியோகபூர்வமாக அறிவித்த மரிக்கார் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Monday, August 26, 2024

சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் 29 ஆம் திகதி வெளியிடப்படும் : உத்தியோகபூர்வமாக அறிவித்த மரிக்கார் எம்.பி

ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிடப்படுமென, ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவின் கொள்கைப் பிரகடனம் இன்று (26) வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment