குவைத்தில் கைதான இலங்கையரில் 24 பேர் விடுதலை, 2 பேர் மேலும் தடுத்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, August 5, 2024

குவைத்தில் கைதான இலங்கையரில் 24 பேர் விடுதலை, 2 பேர் மேலும் தடுத்து வைப்பு

குவைத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை தூதரகம் முன்னெடுத்த நடவடிக்கையின் பலனாக இவர்கள் விடுதலையாகினர். 

முறைாயன அனுமதியின்றி இசை நிகழ்ச்சி நடத்தியதால் பாடகர்கள் உட்பட இலங்கையர்கள் 26 பேரை குவைத் அரசாங்கம் கைது செய்தது. 

பாடகர்களான இந்திரசாப லியனகே, சமனலி பொன்சேகா, ஜோலி சியா மற்றும் உபேகா நிர்மானி உட்பட 26 பேரே, வெள்ளிக்கிழமை (02) குவைத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

ஜே.வி.பி.க்கு சார்பான அமைப்பொன்று ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தபோதே இவர்கள் கைதாகினர்.

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையையடுத்து நேற்று முன்தினமிரவு இவர்களில் 24 பேர் விடுவிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இசைக்குழுவின் இசைக்கருவிகளும் கைப்பற்றப்பட்டன.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment