இலங்கையில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு ! 16 மரணங்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 17, 2024

இலங்கையில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு ! 16 மரணங்கள்

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 34 ஆயிரத்து 906 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 14,248 ஆகும்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 8,452 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 16 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனால், பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment