இலங்கையில் அதிகரித்துள்ள எய்ட்ஸ் நோயாளிகள் ! - News View

About Us

About Us

Breaking

Saturday, August 17, 2024

இலங்கையில் அதிகரித்துள்ள எய்ட்ஸ் நோயாளிகள் !

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று நூற்றுக்கு முன்னூறு வீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 0.03 எய்ட்ஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டாலும், தற்போது அந்த எண்ணிக்கை பத்தில் ஒரு பங்காக அதாவது முந்நூறு சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், தற்போது நாடு முழுவதும் சுமார் 3,500 எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களில் 52 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் STD மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரச்சாரத்தின் சமீபத்திய தரவுகளை மேற்கோள் காட்டி நிபுணர் கூறினார்.

கண்டறியப்பட்ட நோயாளர்களின் சதவீதத்தின்படி, இலங்கையில் குறைந்தது ஐயாயிரம் நோயாளிகள் இருக்க வேண்டும், இதனால் மருத்துவ நிலையங்களுக்கு வராத நோயாளிகள் நாடளாவிய ரீதியில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.

தற்போது அடையாளம் காணப்பட்ட எச்.ஐ.வி தொற்று நோயாளர்களில் நூற்றுக்கு 81 வீதமானோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவான எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

அதிகளவான நோயாளர்கள் பாடசாலை மாணவர்களாகவும், பல்கலைக்கழக மாணவர்களாகவுமே உள்ளனர்.

பெரும்பாலும், ஒருபாலின உறவுகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியிலான தொழில்களில் ஈடுபடுபவர்களிடம் எச்.ஐ.வி தொற்று காணப்படும் என்கிறார்.

எதிர்காலத்தில் இந்த நோயின் பரவல் அதிகரிக்கலாம், எனவே இது குறித்து மக்கள் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment