அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இலங்கையர்களுக்கு மிகவும் பாதுகாப்பான, செயற்திறனுடன் கூடிய e-Passport முறையை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டிற்கான விண்ணப்பிக்கும் செயன்முறை புதிய செயன்முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.
2024.07.16 ஆம் திகதியிலிருந்து கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கு http://www.immigration.gov.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக பூரண பதிவினை மேற்கொள்ள வேண்டும்.
குறித்த தினத்திலிருந்து பதிவுகளை மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கென இந்த செயன்முறை நாளைய தினத்திலிருந்தே ஆரம்பிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்றையதினம் வரை ஏற்கனவே பின்பற்றப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்ப முறையே பின்பற்றப்படுமென்பதை கவனத்திற்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து குடிவரவு குடியகல்வு திணைக்களம் கீழுள்ள இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment