5 வகையான உரங்களின் விலைகள் குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 18, 2024

5 வகையான உரங்களின் விலைகள் குறைப்பு

அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலைகளை இன்று (17) முதல் குறைக்கவுள்ளதாக அரச உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி உரத்தின் விலையை 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.

கறுவா, தேயிலை, தென்னை போன்ற பெருந்தோட்டப் பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் உரங்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, அரச உரக் கம்பனிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உர விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment