(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு மாவட்டம் - கிரான் பிரதேச செயலகப் பிரிவு, வாழைச்சேனை கமநல சேவைகள் நிலைய விவசாய எல்லைக்குட்பட்ட ஆத்துச்சேனையில் ஜாமிஉல் அக்பர் ஜும்ஆப் பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வு வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றது.
பள்ளிவாசல் தலைவர் எம்.எம்.பாறூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிரான் கமநல சேவைகள் நிலைய பெரும்பாக உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீத் கலந்து கொண்டு பள்ளிவாசலை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
பள்ளிவாசல் திறப்பு விழாவின் பின்னர் இடம்பெற்ற முதலாவது குத்பா பிரசங்கத்தை ரிதிதென்ன அபூபக்கர் சித்தீக் ஜும்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி எம்.எல்.எம்.பைரூஸ் நிகழ்தியதோடு, ஜும்ஆத் தொழுகையினை செம்மண்ணோடை பாரி ஜும்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் எம்.எல்.எம்.முஹம்மட் நடாத்தினார்.
காவத்தமுனைப் பகுதியைச் சேர்ந்த மரணமடைந்த மையன் போடியார் ஞாபகர்த்தமாக அவரது பிள்ளைகள் அன்பளிப்பு செய்த காணியில் குறித்த பள்ளிவாசல் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் கீழ்த்தளத்தை எம்.பி. இலவத்தம்பி ஹாஜியாரும், மேல் தளத்தை எம்.பி.புஹாரி ஹாஜியாருடன் இணைந்து நலன்விரும்பிகள் சிலரின் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது, பள்ளிவாசல் உருவாக்கத்துக்கு பாரிய பங்காற்றியோர்களுக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவித்தனர்.
No comments:
Post a Comment