(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு இன்று புதன்கிழமை (17) தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்ட புதிய கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிரை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி அதிபர் சங்கம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, அதிபர் சங்க தலைவர் என்.சஹாப்தீன் தலைமையில் இடம்பெற்றது.
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் அதிபராக பணிபுரிந்து வந்த புதிய கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் சேவை மூப்பு அடிப்படையில் இலங்கை கல்வி நிருவாக சேவை பரீட்சையில் சித்தியடைந்து அண்மையில் உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றிருந்தார்.
அந்த வகையில், கடமையினை பொறுப்பேற்றுக் கொண்ட புதிய கோட்டக் கல்விப் பணிப்பாளரை வரவேற்கும் இந்நிகழ்வில், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், மட்டக்களப்பு மத்தி ஆசிரிய ஆலோசகர்களான எம்.பி.ரீ.கான், எஸ்.எம்.கடாபி, எச்.எம்.ஆதம் லெப்பை மற்றும் கோட்டக் கல்வி அலுவலக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.அக்பர், அலுவலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment