ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் டொனால்ட் ட்ரம்ப் : கட்சி மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 16, 2024

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் டொனால்ட் ட்ரம்ப் : கட்சி மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக முன்மொழியப்பட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி வேட்பாளராக செனெட்டர் ஜேடி வின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்ட தேர்தல் பேரணியின் பின்னணியில் குடியரசு கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதியின் காதில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் உளவுத்துறையின் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சந்தேகநபர் 20 வயதான தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்போது, கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment