கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரியவில் இன்று (08) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பக்கிச்சூட்டில் பிரபல பாடகி கே.சுஜீவா உள்ளிட்ட 06 பேர் காயமடைந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்குள்ளான 'க்ளப் வசந்த' என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உயிரிழந்துள்ளார்.
அத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவரும் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் கே.சுஜீவாவின் கால்களில் காயமேற்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர், வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
அத்துடன் அவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment