மன்னார் கடற்கரையில் 2,888 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு : மூவர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, July 8, 2024

மன்னார் கடற்கரையில் 2,888 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு : மூவர் கைது

வங்காலை கடற்கரையில் இருந்து பீடி இலைகள் கொண்ட பொதிகள் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டபோது இன்று (8) காலை மன்னார் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் ஒரு தொகுதி பீடி இலைகள் கொண்ட மூடைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்காலை கடற்கரையில் வைத்து ஒரு தொகுதி பீடி இலைகள் கொண்ட பொதிகள் ஏற்றப்படுவதாக கடற்படையினர் மன்னார் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

குறித்த தகவல்களுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.ஏ.எஸ்.சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் (1) ஹேரத்தின் வழி நடத்தலில் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சில்வா தலைமையில் சென்ற குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் வங்காலை கடற்கரையில் வாகனம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட பீடி இலைகள் ஏற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

80 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 888 கிலோ பீடி இலைகள் மீட்கப்பட்டதோடு மன்னார் பகுதியைச் சேர்ந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பீடி இலை மூடைகள், வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்கள் வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வங்காலை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களையும், மீட்கப்பட்ட பொருட்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

No comments:

Post a Comment