நாட்டில் நல்லாட்சி முறையினை மேம்படுத்துவதனூடாக IMF திட்டத்தினை வெற்றிகரமானதாக மாற்ற முடியுமா? - வெரிட்டே நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 9, 2024

நாட்டில் நல்லாட்சி முறையினை மேம்படுத்துவதனூடாக IMF திட்டத்தினை வெற்றிகரமானதாக மாற்ற முடியுமா? - வெரிட்டே நிறுவனம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) நடைமுறைத் திட்டத்தின் மூன்றாவது பணக் கொடுப்பனவுக்கான ஒப்பந்தத்தில் ஜூன் 12ஆம் திகதி கைச்சாத்திடவுள்ளது. ஆனால், இலங்கை தனது பொருளாதார மீட்புக்கான அடிப்படை நல்லாட்சியினை முன்னேற்றுவதற்கு தவறிவிட்டது.

சமீபத்திய வெரிட்டே நிறுவனத்தின் IMF கண்காணிப்பானின் 2024 மே மாத தரவுகளின் அடிப்படையில், டிசம்பர் 2023 இல் புதிப்பிக்கப்பட்ட திட்டத்தின்படி, 25% வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இத்திட்டத்தில் முடிக்கப்பட வேண்டிய 63 வாக்குறுதிகளில் 32 வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டும், 16 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலும், 15 அறியப்படாமலும் உள்ளது. (தரவுகள் கிடைக்காததால் உண்மைத்தன்மையினை கண்டறிய முடியவில்லை.)

நிறைவேற்றப்படாத 16 வாக்குறுதிகளை ஆராயும்போது நல்லாட்சியில் தோல்வி ஏற்படும் என்ற முடிவுக்கு வந்துள்ளது.

16 வாக்குறுதிகளையும் ஆய்வு செய்யும்போது அவற்றில் 7 நிதி முகாமைத்துவம், 6 நிதி வெளிப்படைத்தன்மை, 3 ஊழல் எதிர்ப்பு அளவீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

IMF திட்டத்தினால் பொருளாதார நெருக்கடியின் மூல காரணங்களாக கண்டறியப்பட்ட விடயங்களை இலங்கை நிறைவேற்றவில்லை. அதாவது நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு. ஆசியாவில் முதல் முதலாக நடாத்தப்பட்ட IMF தலைமையில் நல்லாட்சி கண்டறியும் மதிப்பீட்டு அறிக்கை இலங்கையில் செய்யப்பட்டது என்று 2023 செப்டம்பரில் வெளியிடப்பட்டது.

இதேபோல் இலங்கை சிவில் சமூக அமைப்பு தனியாக மேற்கொண்ட நல்லாட்சி கண்டறியும் மதிப்பீடு IMFஇனால் மதிப்பிடப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையுடன் பெரிதும் ஒத்துப்போகின்றது. இந்த 17 வது IMF திட்டம் ஊழல் மற்றும் முறைகேடான ஆட்சி ஆகிய மூல காரணங்களை கையாள்வதன் மூலம் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சிறப்பான முறையில் தீர்க்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

எவ்வாறாயினும், நல்லாட்சி வாக்குறுதிகளுக்கு IMF சரிவர முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் அவை திரும்ப திரும்ப புதிப்பிக்கப்படுகின்றன.

IMF அதிக முக்கியத்துவம் கொடுத்த நிலையான நிதி நடவடிக்கைகள் முந்தைய 16 IMF திட்டங்களிலும் இருந்தவையாகும்.

தற்போதைய திட்டத்தின் தனித்தன்மை யாதெனில் வெளிப்படைத் தன்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு என்பவற்றினை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் இலங்கை பொருளாதார மீட்சியின் அத்திவாரமாக மாறாவிட்டால் இது கடந்த கால வட்டத்தினை வளர்க்கும் ஒரு தவறவிட்ட வாய்ப்பாகும்.

இது முந்தியதை முடித்து ஐந்து ஆண்டுகளுக்குள் இலங்கையினை இன்னுமொரு IMF திட்டத்துக்குள் திரும்பவும் கொண்டுவரும்.

No comments:

Post a Comment