ஆலய கும்பாபிஷேகத்தில் நகைகளை திருடிய பெண் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, June 9, 2024

ஆலய கும்பாபிஷேகத்தில் நகைகளை திருடிய பெண் கைது

யாழ்ப்பாணம் கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த அடியார்களின் தாலிக்கொடி மற்றும் நகைகளை திருடிய பெண்ணொருவர் இன்று (09) கைது செய்யப்பட்டார்.

வவுனியா பூந்தோட்டத்தில் வசிக்கும் கொழும்பு வெல்லம்பிட்டியவை சேரந்த 27 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணை கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்த பொழுது பெண்ணின் உள்ளாடைக்குள் இருந்து திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் நகைகள் மீட்கப்பட்டன.

குறித்த பெண் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணப் பிராந்திய குற்றதடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கபட்டு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.விசேட நிருபர்

No comments:

Post a Comment