பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் ஏற்றிய பட்டதாரிகள் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 9, 2024

பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் ஏற்றிய பட்டதாரிகள்

பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி வேலையில்லா பட்டதாரிகள் இன்று (09) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது, படிப்பிற்க்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா, எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும், படித்ததக்கு கூலிதொழிலா கடைசி வரைக்கும், படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா?, பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா ?, படித்தும் பரதேசிகளாக திரிவதா? என கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

யாழ்.விசேட நிருபர்

No comments:

Post a Comment