ஒரு வருடத்துக்குப் போதுமான புற்றுநோய் மருந்துகள் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2,25,000 அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த மருந்துகளை LDS Latter-day saints charities நிறுவனம் சுகாதார அமைச்சிடம் நேற்றுக் காலை (11) வழங்கியது.
நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளில் புற்று நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளை சுகாதார அமைச்சுக்கு வழங்கும் நிகழ்வு நேற்றுக் (11) காலை அமைச்சில் நடைபெற்றது.
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைப் பெற்றுக் கொண்டார். இந்த ஆண்டு பெப்ரவரியில் சுகாதார அமைச்சுக்கும் LDS நிறுவனத்துக்கும் இடையில், கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு இணங்க இந்த மருந்து வகைகள் வழங்கப்பட்டன.
இந்த உடன்படிக்கையின்படி, 13 வகையான அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகள் கிடைக்கவுள்ளன.
இதன் பெறுமதி ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும். நாட்டில் ஒரு வருட புற்றுநோய் சிகிச்சைக்கு இது போதுமானதாக இருக்கும். மாத்திரைகள், ஊசி வகைகள் மற்றும் மருந்துகள் என்பன இதில் உள்ளன.
No comments:
Post a Comment