எமது newsview இணையத்தளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது இரத்ததான முகாம் கடந்த 2023.08.05ஆம் திகதி மட்/மம/மீராவோடை அல் - ஹிதாயா மகா வித்தியாலயத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
இவ்விரத்ததான முகாமினை சிறப்பாக ஏற்பாடு செய்து நடாத்தியமைக்காக ஜூன் மாதம் 14 ஆம் திகதி சர்வதேச குருதிக் கொடையாளர் தினத்தினைச் சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி ஊழியர்கள் 2024.06.24ஆம் திகதி திங்கட்கிழமை நேரடியாக வருகை தந்து சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தனர்.
குறித்த இரத்தான முகாமில் சுமார் 75 க்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கியிருந்ததோடு, அவர்களுக்கு விஷேடமாக நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்தோடு இவ்விரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற அனைத்து வகையிலும் தோளோடுதோள் நின்று ஒத்துழைப்பு வழங்கிய எமது newsview இணையத்தள குழும உறுப்பினர்கள் அனைவருக்கும் விஷேடமான நன்றிகளையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
editor
www.newsview.lk
No comments:
Post a Comment