முன்பகை காரணமாக நெடுந்தீவில் இளைஞன் படுகொலை - News View

About Us

About Us

Breaking

Thursday, June 20, 2024

முன்பகை காரணமாக நெடுந்தீவில் இளைஞன் படுகொலை

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் சேர்ந்த 23 வயதான சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் என்பவரே கொலை செய்யப்பட்டார்.

இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று (19) இரவு மதுபோதையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றதாகவும், அதன் பின்னர் குறித்த கொலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நெடுந்தீவு வைத்தியசாலையில், ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்கள் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.விசேட நிருபர்

No comments:

Post a Comment