கதிர்காமம் காட்டுப் பாதை திறக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Saturday, June 29, 2024

கதிர்காமம் காட்டுப் பாதை திறக்கப்பட்டது

கதிர்காமம் முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்தினை காண காட்டுப்பாதை வழியாக மக்கள் இன்று (30) காலை பாதயாத்திரை மேற்கொண்டனர்.

பக்தர்களுக்காக லாகுகலை உகந்தை வன பாதையின் கதவானது, உகந்தை முருகன் ஆலயத்தில் இன்று காலை 6.00 மணியளவில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டினை தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அம்பாறை, மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட குழுவினர் இதன்போது கலந்துகொண்டனர்.

ஆரோஹரா கோஷத்துடன் பக்தர்கள் தங்களது காட்டுவழிப் பயணத்தினை இன்று ஆரம்பித்தனர்.

மேலும், எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் கதிர்காம உற்சவம் 2024.07.22 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.

அத்துடன் இன்று திறக்கப்பட்ட கதிர்காமம் காட்டுப்பாதை எதிர்வரும் 2024.07.11 ஆம் திகதி மூடப்படும்.

No comments:

Post a Comment