இணைய நிதி மோசடிகள் அதிகரிப்பு : 30 சீன பிரஜைகள் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, June 29, 2024

இணைய நிதி மோசடிகள் அதிகரிப்பு : 30 சீன பிரஜைகள் கைது

இணைய நிதி மோசடிகளில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்தது.

இந்த விடயம் தொடர்பில் ஆண்டின் கடந்த 5 மாதங்களில் மாத்திரம் 890 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுணுபொல குறிப்பிட்டார்.

இதனிடையே, இணையத்தை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 167 வௌிநாட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மிக அண்மைய சம்பவம் நீர்கொழும்பில் நேற்று இரவு பதிவாகியுள்ளது.

இதன்போது, 30 சீன பிரஜைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையத்தின் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 137 இந்திய பிரஜைகள் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment