மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தில் கோடிக்கணக்கான பணம் கொள்ளை : எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 29, 2024

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தில் கோடிக்கணக்கான பணம் கொள்ளை : எதிர்க்கட்சித் தலைவர்

மன்னார் பிரதேசத்தில் 500 மெகாவாட் காற்றாலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை அமைக்க அரசாங்கம் எட்டிய உடன்படிக்கையையடுத்து, போட்டித்தன்மை வாய்ந்த விலைமனு கோரல் இன்றி மன்னார் காற்றாலை மின் உற்பத்தியின் அலகொண்றை 8.26 டொலருக்கு கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு வருவதற்கு அரசாங்கம் உடன்பாட்டை தெரிவித்துள்ளது. போட்டி முறையில் அமைந்த விலைமனு கோரலுக்குச் சென்றால் குறைந்த தொகையில் பெற முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தமது நிலைப்பாட்டை பல முறை தெரிவித்துள்ளது. இது எதனையும் பொருட்படுத்தாமல் அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இரத்தினபுரியில் (28) நடைபெற்ற ஐக்கிய இராணுவ வீரர்கள் சக்தியின் 7 ஆவது கட்ட மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 50 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்திற்கான விலைமனு கோரலை போட்டி மிகு விலைமனு ஊடாக மின்சார சபை கோர தீர்மானித்திருந்தாலும், அந்த விலைமனு இதுவரை கோரப்படவில்லை. இந்தச் சட்ட விரோத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
மின்சார சபையின் 50 மெகாவாட் திட்டத்துக்கான போட்டி மிகு விலைமனு அறிவிக்கப்பட்டுள்ளன. 50 மெகாவாட்டின் அலகொண்றின் கொள்வனவு விலை 4.8 அமெரிக்க டொலர்கள் ஆகும். போட்டி மிகு விலைமனு இல்லாமல் போன 500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தியின் அலகொண்றின் கொள்வனவு விலை 8.26 டொலர்களாக அமைந்து காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இதற்கேற்ப அரசின் திருட்டு வெளிப்படையில் நடந்துள்ளது. 50 மெகாவாட் உற்பத்தி திட்டத்தின் விலைமனு ஊடான விலையை தெரிந்து கொள்ளும் வரை, 500 மெகாவாட் உற்பத்தித் திட்டத்திற்கான விலையை முடிவு செய்ய வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி பல முறை கோரிக்கை விடுத்தது. இவற்றுக்கு செவிசாய்க்காமலே, அமைச்சரவை சட்டவிரோதமான முறையில் குழுவொன்றை நியமித்து, இரண்டாவது விலைமனுவின் நிர்ணய விலை வெளிவருவதற்கு முன்னரே 500 மெகாவாட் திட்டத்திற்கு அதிக விலையில் அனுமதி வழங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நடைமுறையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தாமதப்படுத்தியுள்ளது. போட்டி மிகு விலைமனு முறை தவிர்ந்த 500 மெகாவாட் ஒப்பந்தத்தையும், சட்டமா அதிபரின் இணக்கப்பாட்டையும் கோரியுள்ளது. இவை அனைத்திற்கும் இன்னும் பதில் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இவ்வாறு அதிக விலையில் இணக்கப்பாட்டை எட்டி, மேலதிக டொலர்களை திருடியவர்கள் யார்? வெட்கமே இல்லாமல் நட்புவட்டார ஒப்பந்தத்தைச் செய்து கொண்டவர்கள் யார்? என்பதை நாடு தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் சமீப காலங்களில் பல்வேறு வரப்பிரசாதங்களும், சலுகைகளும் வழங்கப்படுகின்றன. 

நாட்டின் வளங்களைச் சூறையாடுவதற்கு போட்டி முறை விலைமனு எதுவும் பின்பற்றப்படாமல் நாட்டின் சொத்துக்கள் விற்கப்பட்டு வருகின்றன. பியர் மற்றும் மதுபான அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தி இந்த சட்டவிரோத செயல்கள் அனைத்தையும் இரத்துச் செய்யும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் வளங்களையும் சொத்துக்களையும் அப்பட்டமாக சூறையாடிய குழுக்கள் அரசின் பாதுகாப்பில் சொகுசான வாழ்க்கை வாழ்வதே நாடு வங்குரோத்து நிலையை அடைவதற்கு முக்கிய காரணமாகும். 220 இலட்சம் மக்கள் மீது வரம்பற்ற வரிச்சுமையைச் சுமத்தியுள்ளனர். நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களுக்கான நடைமுறை ரீதியலான நிலையான தீர்வு அரசாங்கத்திடம் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இராணு வீரர்கள் முன்னெடுத்த மனிதாபிமானப் பணியால் முப்பது வருட கால யுத்த சாபம் தீர்ந்தது நாடு காப்பாற்றப்பட்டது. அதேபோல், ஊழல்வாதிகள், கொள்ளையர்கள், மோசடி செய்பவர்கள், நிதிக் கொலையாளிகள் ஆகியோரிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும் அடுத்த கட்ட மனிதாபிமான பணியை முன்னெடுத்துச் செல்ல முன்வருமாறு இங்கு எதிர்க்கட்சித் தலைவர் இராணுத்தினருக்கு அழைப்பு விடுத்தார். 

ஊழல் மற்றும் மோசடிகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் முன் பதில் சொல்ல வேண்டும். நாடு இழந்த வளங்களை மீண்டும் பெற்றெடுக்க்கும் முயற்சிகளை நாம் மேற்கொள்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

திருடர்களைப் பிடிப்பதாகக் கூறி வந்த குழுக்களும், திருடர்களைப் பிடிப்போம் என்று ஊழல்கள் பற்றி ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுக்களில் தலைவர்களாக செயற்பட்டவர்களும், அன்று திருடர்களைப் பிடிப்பதை விடுத்து, திருடர்களை நாம் பிடிப்போம் என தற்போது நாடு முழுவதும் பெருமை பேசி வருகின்றனர். இவர்கள் இன்று திருடர்களுடன் டீல் போட்டு வருகின்றனர். இந்த திருடர்களுடன் டீல் போட்டுள்ளவர்கள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியைப் பொறுப்பேற்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். திருடர்களின் ஆதரவை விடுத்து, மக்களின் ஆணை மூலமே ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்புகளை ஏற்கும்.
திருடர்களின் தயவில் அரச மாளிகைகளுக்குச் சென்றவர்களும் தற்போது திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைத் தொடர்ந்து 48 மணித்தியாலங்களுக்குள் இராணுவ வீரர்களுக்கான விசேட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டு, 3 தொடக்கம் 6 மாத காலப்பகுதிக்குள் இராணுவ வீரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான விரைவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு, சுதந்திரம், இறையாண்மை என்பவற்றைப் பாதுகாக்க பாடுபட்ட இராணுவ வீரர்கள் எதிர்ப்பு பேரணிகளில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. தமக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், ஜனாதிபதி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து அதனை நாட்டின் தலைவர்களிடம் நேரடியாக முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை முன்னெடுத்து, 5 ஆண்டுகள் சேவை மற்றும் 12 ஆண்டுகள் சேவைகளில் ஈடுபட்டவர்களுக்கு பணிக்கொடை திட்டத்தை ஆரம்பிப்போம். 
ஒவ்வொரு மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலைகள் கட்டமைப்பிலும் இராணுவ வீரர்களுக்கான விசேட சுகாதார சேவைகளை உருவாக்கித் தருவோம். ரணவிரு சேவா அதிகார சபையை திணைக்களமாக மாற்றுவோம். 

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இராணுவ வீரர்களின் நிவாரண சேவைகளை பரவலாக்குவோம். அவர்கள் பிரதான அலுவலகங்களுக்கு வருவதற்கு பதிலாக, பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மூலம் நிலையான தீர்வுகளை வழங்கும் நடைமுறை மற்றும் வினைதிறனான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இராணுவ வீரர்கள் அவர்கள் பெறும் ஓய்வூதியத்துடன் மட்டுப்படுத்தப்பட்டவர்களாக ஆக்காது, சமூகத்தின் உயர் வருமானம் கொண்ட குடிமகனாக, ஒரு தொழில்முனைவோராக மாற்றும் நடவடிக்கையை ஆரம்பிப்போம். மாவட்ட மட்டத்தில் ரணவிரு நிவாரண நிதியங்களை ஸ்தாபித்து, வட்டி வருமானத்தில் இருந்து ரணவிரு சமூகத்திற்கு நிவாரணம் வழங்கும் புதிய வேலைத்திட்டம் ஸ்தாபிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment