புனித மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வின் திறப்பாளர், அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஷைபா, இறையழைப்பை ஏற்றார்.
நேற்று (22) சுப்ஹு தொழுகைக்கு பின்னர் மஸ்ஜிதுல் ஹராமில் அன்னாரின் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு ஜன்னத்துல் முஅல்லா கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுரைப்படி புனித கஃபதுல்லாஹ்வின் சாவி ஹஜ்ரத் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹுவிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று வரை அவர்களின் குடும்பத்தினர் பொறுப்பிலேயே அந்த சாவி இருக்கிறது.
சவூதி மன்னர், புனித கஃபதுல்லாஹ்வில் நுழைய வேண்டும் என்றாலும், இந்த குடும்பத்தினர்தான் திறந்து விட வேண்டும்.
தற்போது ஹஜ்ரத் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 109 ஆவது தலைமுறையினரான கண்ணியமான அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஷைபா அவர்களிடம்தான் புனித கஃபதுல்லாஹ்வின் சாவி இருக்கிறது. அந்த மாண்பாளர் நேற்றையதினம் இறையழைப்பை ஏற்றுள்ளார்.
No comments:
Post a Comment