இலங்கையிலும் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் ! எச்சரித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 23, 2024

இலங்கையிலும் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் ! எச்சரித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம்

நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவுக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தியா போன்ற அயல் நாடுகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் (bird flu) அல்லது ஏவியன் இன்ப்ளுவன்சா (avian influenza) என்பது ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.

இது முதன்மையாக பறவைகளை பாதிக்கிறது, அத்தோடு, மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பறவைக் காய்ச்சலின் மிகவும் பொதுவான வடிவமாக H5N1 உள்ளது.

H5N1 என்பது வைரஸ்/இன்ப்ளுவன்சா ஆகும். பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவை அல்லது விலங்குகளுடன் மனிதர்கள் தொடர்புகளை பேணினால் இந்த வைரஸ் மனிதர்களையும் தாக்கும். 

முக்கிய பறவைக் காய்ச்சல் வைரஸ் திரிபுகளில் H5, H7, H9 மற்றும் H10 ஆகியவை அடங்கும். H5N1, H5N8 (அரிதாக), H7N9, H7N2, H7N3, H7N7, H9N2 மற்றும் H10N8 ஆகியவை முக்கிய மனித தொற்று திரிபுகள். H5N1 மற்றும் H7N9 ஆகியவை குறிப்பாக கடுமையானவை, இதனால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. H9N2 மற்றும் H10N8 பொதுவாக சாதாரணமான நோயை ஏற்படுத்தும். இந்த வைரஸ்கள் பிறழ்வடைந்து தொற்றுநோய்களை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியமாகதாகும்.

சமீபத்தில்  இந்தியாவில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா என்கிற 'A’ வகை வைரஸால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது.

மனிதர்களுக்கு வைரஸ் பரவியமை தொடர்பில் கண்டறியப்பட்ட  இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். கோழிப் பண்ணையில் இருந்து வைரஸ் பரவி இருந்த நிலையில் அந்த குழந்தை குணமடைந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவியமை கண்டறியப்பட்டது.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் மே மாதம் அவுஸ்திரேலியாவில் முதன்முதலில் மனிதனுக்கு பறவைக் காய்ச்சல் பரவியதை உறுதிப்படுத்தியது. குறிப்பாக H5N1 திரிபு, சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியா ஊடாக பயணம் செய்த ஒரு குழந்தைக்கு கண்டறியப்பட்டது.

2024 ஆம் ஆண்டு H5N1 பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவிய சந்தர்ப்பம் மூன்று பதிவாகியுள்ளது. அவை அனைத்தும் அமெரிக்காவில் டெக்சாஸ் மற்றும் மிச்சிகனில் உள்ள மாடுகளிலிருந்து பரவியுள்ளது.

இதுவரை பதிவாகியுள்ள பறவைக் காய்ச்சலின் அனைத்தும் விலங்குகளிடமிருந்து பரவியவையாகும். அத்தோடு பறவைக் காய்ச்சல் மனிதனிடம் இருந்து மற்றுமொரு மனிதனுக்கு பரவியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை.

இது தொடர்பில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளதாவது, பறவைக் காய்ச்சலின் பல்வேறு திரிபுகளினால் வைரஸ் மனிதர்களுக்கு பரவுவது கவலை அளிக்கிறது.

மனிதர்களுக்கு H9, H7 மற்றும் H5 பறவைக் காய்ச்சல் நோய்களைக் கண்டறியும் திறனை இலங்கை உருவாக்கியுள்ளது.

மேலும், வைத்தியசாலைகளில் உள்ள வழக்கமான காய்ச்சல் பரிசோதைனைகள் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதைக் கண்டறியும் திறன் கொண்டது அவர் சுட்டிக்காட்டினார்.

பறவைகள் தங்கள் உமிழ்நீர், சளி மற்றும் மலம் ஆகியவற்றில் வைரஸை வெளியேற்றுகிறது. அதன் மூலம் பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது அசுத்தமான சூழலில் நெருங்கிய, பாதுகாப்பற்ற தொடர்பு கொண்ட மக்கள் அல்லது விலங்குகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment