கல்விப் பொதுத் சாதாரண தரப் (2023/2024) பரீட்சை பெறுபேறுகளை இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர “தினகரனு”க்கு நேற்று (23) தெரிவித்தார்.
சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றை ஒன்றரை மாதங்களில் என்ற குறுகிய காலத்திற்குள் வெளியிட முடிந்துள்ளமை, கல்வித்துறையின் வெற்றிகரமான மைல்கல்லாகவே பார்க்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாதாரண தர பரீட்சை மே மாதம் 06 இல், ஆரம்பமாகி மே 15 இல், முடிவடைந்தது. 3,527 மத்திய நிலையங்களிலும், 535 ஒருங்கிணைப்பு நிலையங்களிலும் பரீட்சை நடைபெற்றது.
இந்த ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சைக்கு 4,52,979 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இவர்களுள் 3,87,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது .
No comments:
Post a Comment