கடவுச்சீட்டை ஒப்படைத்தார் டயனா கமகே : விரைவில் சட்ட நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, May 20, 2024

கடவுச்சீட்டை ஒப்படைத்தார் டயனா கமகே : விரைவில் சட்ட நடவடிக்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது கடவுச்சீட்டை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கமையவே அவர், பயன்பாட்டிலுள்ள தனது கடவுச்சீட்டை ஒப்படைத்துள்ளார்.

டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்து உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. டயனா கமகே இலங்கைப் பிரஜை இல்லையென்பதால், அவர் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதற்கமைய, அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிப்பதை தடுத்து நீதிமன்றத்தினால் எழுத்தாணை கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே, டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே கடந்த (09) தீர்ப்பளித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அரசாங்கத்துக்குச் சொந்தமான மூன்று உத்தியோகபூர்வ வாகனங்களையும் கடந்த (10) அதிகாரிகளிடம் கையளித்திருந்தார்.

இதேவேளை கடந்த (15) டயனா கமகேவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஜந்து மணி நேரம் வாக்குமூலமொன்றையும் பதிவு செய்திருந்தது.

இதன் பின்னர், சட்டமா அதிபருடன், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு கலந்துரையாடி, டயானா கமகேவின் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டது. 

டயனா கமகேவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பலதரப்பட்ட ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment