இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் மலேரியா ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 24, 2024

இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் மலேரியா !

இலங்கையில் இவ்வருடம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 9 மலேரியா நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூலசிறி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்து நாடு திரும்பியவர்களின் மத்தியிலேயே அதிகளவான மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இறுதியாக 2012 ஆம் ஆண்டு மலேரியா நோய் பதிவாகியிருந்த போதிலும் 2023 ஆம் ஆண்டு 62 மலேரியா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டதாக சமூக மருத்துவ நிபுணர் புபுது சூளசிறி குறிப்பிட்டுள்ளார்.

அந்த நோயாளர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைதி காக்கும் கடமைகளுக்குச் சென்ற இராணுவத்தினர் மற்றும் இரத்தினக் கற்கள் வர்த்தகம் செய்யச் சென்றவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment