பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 28, 2024

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று (27) தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும், இதொகாவின் தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.

“தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக மட்டுமே அமையும்.

“தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள உயர்வையே கோரினோம்” என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும், செந்தில் தொண்டமான் எடுத்துரைத்தார்.

இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment