பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா : உறுதிப்படுத்தியுள்ள சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 27, 2024

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா : உறுதிப்படுத்தியுள்ள சபாநாயகர்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய, 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்படும்.

உத்திக பிரேமரத்ன 2020 பொதுத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

விமல் வீரவன்ச தலைமையில் பாராளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்படும் குழுவில், உத்திக பிரேமரத்ன செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment