மின்சார கட்டணம் குறைப்பு : பாராளுமன்றத்தில் அறிவித்தார் அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 21, 2024

மின்சார கட்டணம் குறைப்பு : பாராளுமன்றத்தில் அறிவித்தார் அமைச்சர்

கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை அவ்வாறே முழுமையாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும்போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேகேர தெரிவித்தார்.

அதற்கமைய, வீட்டுப் பாவனை மற்றும் மத வழிபாட்டு தலங்கள் பிரிவின் கீழ் கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட 18% மின்சார கட்டண அதிகரிப்பு, சுற்றுலாத்துறையில் மேற்கொள்ளப்பட்ட 12% மின்சார கட்டண அதிகரிப்பு, அரச நிறுவனங்களின் 24% மின்சார கட்டண அதிகரிப்பு, ஆகியன புதிய திருத்தத்தின் பிரகாரம் முழுமையாக அதே வீதத்தில்
முழுமையாக குறைக்கப்படும் என அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

குறித்த அதிகரிப்பிலும் பார்க்க மேலும் குறைக்க முடியுமா எனவும் பார்க்குமாறு மின்சார சபையிடம் தாம் தெரிவித்ததாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

அதற்கமைய, நாளையதினம் (22) இது தொடர்பான கட்டண திருத்த யோசனையை இலங்கை மின்சார சபை, முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து குறித்த கட்டண குறைப்பானது, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கு வழங்கப்பட்டு பின்னர் அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்கத்கது.

No comments:

Post a Comment