பாரத் லங்கா வீட்டுத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம் : அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஒருங்கிணைப்பின் கீழ் நிகழ்வுகள் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 18, 2024

பாரத் லங்கா வீட்டுத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம் : அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஒருங்கிணைப்பின் கீழ் நிகழ்வுகள்

இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் - லங்கா எனும் வீட்டுத் திட்டம் நாளை (19) ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

முதற் கட்டமாக ஆயிரத்து 300 வீடுகளுக்கு ஒரே தடவையில் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பணம் இடம்பெறவுள்ளது.

இதன் பணிகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை, மொணராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 தோட்டங்களில் நாளை (19) நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பண விழா நடைபெறுகின்றது.

இதன் பிரதான நிகழ்வு நாளை (19) காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோரின் பங்கேற்புடன் நிகழ்நிலை மூலம் பிரதான நிகழ்வு இடம்பெறும்.

அதேபோல 45 தோட்டங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் நேர்த்தியான முறையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment