மைத்திரிக்கு வீடு வழங்கும் தீர்மானம் இரத்து : அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக நீதிமன்றம் தீர்ப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 29, 2024

மைத்திரிக்கு வீடு வழங்கும் தீர்மானம் இரத்து : அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக நீதிமன்றம் தீர்ப்பு

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது அவர் வசித்த கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள வீட்டை அவர் ஓய்வு பெற்ற பின்னரும் அவருக்கே வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, 2019 அக்டோபர் 15 ஆம் திகதி உரிய வீட்டை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்று கொள்கைகளுக்கான நிலைய பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் காமினி அமரசேகர மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment