போதகர் ஜெரோம் பெனாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் (03) முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மதங்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து தொடர்பான குற்றச்சாட்டில் கடந்த டிசம்பர் மாதம் 01ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அதற்கமைய ரூ. 5 இலட்சம் ரொக்கம் மற்றும் தலா ரூ. 10 மில்லியன் கொண்ட 2 சரீர பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி 8 மணித்தியால வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து 2ஆவது நாளாக டிசம்பர் மாதம் 01ஆம் திகதியும் வாக்குமூலம் வழங்க CID யில் முன்னிலையான வேளையில், போதகர் ஜெரோம் பெனாண்டோ கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment