உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கலுடன், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும், அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும் அருட்தந்தை நந்தன மனதுங்க தெரிவித்தார்.
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர், நீதிமன்றுக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் தொடர்பில் பல்வேறு உண்மைகள் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இந்த தாக்குதல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனாலேயே நாம் இன்று அவருக்கு ஆதரவு தெரிவிக்க நீதிமன்றுக்கு வந்தோம்.
ஹிஜாஸை போன்றே இந்த தாக்குதல்களுடன் தொடர்பில்லாத மேலும் பலரும் பல்வேறு தேவைகளுக்காக கைது செய்யப்பட்டனர். இப்போது உண்மைச்சூத்திரதாரிகள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஹிஜாஸுக்கு எதிரான வழக்கின் தீர்ப்புக்காக நாம் காத்திருக்கின்றோம் என்றார்.
Vidivelli
No comments:
Post a Comment